தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம், கொடைக்கானல் உள்ளிட்ட 13 நகராட்சி ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டாட்சியர்களும் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.