Categories
மாநில செய்திகள்

13 நாட்கள் காசி, கயாவுக்கு யாத்திரை ரயில்…. சுற்றுலா போக நீங்க ரெடியா?…. உடனே இதை பண்ணுங்க….!!!

தை அமாவாசை முன்னிட்டு காசி மற்றும் கயாவுக்கு யாத்திரையில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாரத் கெளரவு ரயில் திட்டம் தனியார் பங்களிப்புடன் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி தமிழகத்திலிருந்து காசி, கயா, காமாக்யா உள்ளிட்ட தளங்களை காணும் விதமாக யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரையில் இருந்து புறப்படும் யாத்திரையில் திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை,காட்பாடி மற்றும் சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.

மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசி, பிரயாக் ராஜ், பீகார் மாநிலம் கையா மற்றும் அசாம் மாநிலம் காமக்கியா உள்ளிட்ட பல்வேறு இடங்களை காணும் விதமாக இந்த யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 13 நாட்கள் யாத்திரைக்கு ஏசி பெட்டியில் 27,800 ரூபாய் கட்டணமும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கு 21,500 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.ularail.com என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம் எனவும் கூடுதல் விவரங்களுக்கு 73058 58585 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |