தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக வெலிங்டன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக வெலிங்டன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் அருள் ரத்தினா புகாரின் பேரில் சட்டப் பிரிவு 174 இன் கீழ் (இயற்கைக்கு மாறான மரணம்) வெலிங்டன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்..