கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கத்தால் புற்றுநோய் இருந்தது கண்டறியப்படாமல் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள மேற்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் ஷர்வின் ஹால் (27). இவரது மனைவி லாத்ரோயா ஹால். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சர்வின் கடந்த மார்ச் மாதத்தில், கால் வலியினால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு பலமுறை சென்றும் அவருக்கு ஆன்டிபயாட்டிக் சிகிச்சையை மட்டும் அளித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே சர்வின் மற்றும் அவரது மனைவி எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக சுமார் 13 முறை மருத்துவமனைக்குச் சென்று கேட்டுள்ளனர்.
எனினும் மே மாத இறுதியில்தான் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய மருத்துவமனை அனுமதித்துள்ளது. இதில் அவருக்கு புற்றுநோய் கட்டிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டதால், அவரை குணப்படுத்த முடியவில்லை. இதனால் செர்வினின் நிலை மிகவும் மோசமானதால் மரணப்படுக்கையில் இருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய மருத்துவரிடம் கோரினேன். அப்போது கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஸ்கேன் சேவைகள் முடக்கத்தில் உள்ளது என்று தெரிவித்தனர். இதனால் தான் தனக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.
முதலில் இவரின் குறைகளை சில மருத்துவர்கள் பால்வினை நோய் என்று கூறியுள்ளனர். ஆனால் இவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அது பால்வினை நோய் இல்லை என்று உறுதியானது. நாங்கள் கேட்டபோதே ஸ்கேன் செய்ய அனுமதித்திருந்தால் என் கணவர் எங்களுடன் இருந்திருப்பார் என்று அவரது மனைவி லாத்ரோயா ஹால் கண்ணீருடன் தெரிவித்தார்