Categories
மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. வெளுத்துப் போகும் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சேலம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |