13-ம் நூற்றாண்டின் நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை அருகே இருக்கும் மாயா குளம் பாரதி நகர் கடற்கரை பகுதியில் சிலை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. கீழக்கரை கடற்கரை பகுதியில் ஏற்கனவே பல சிலைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது பழமை வாய்ந்த நந்தி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதின் நீளம் 150 சென்டிமீட்டர், அகலம் 33 சென்டிமீட்டர், உயரம் 49 சென்டிமீட்டர் என இருக்கின்றது.
இந்த நந்தி சிலையானது 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என சொல்லப்படுகின்றது. இதில் ஓம் பசுபதி பசுபதி என்று வாசகம் இருக்கின்றது. விலங்குகளின் கடவுள் பசுபதிநாதர் என அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் மாயா என்பவர் இப்பகுதியில் குளம் அமைத்து சிவனை நோக்கி தவம் இருந்ததாம். இந்த ஊருக்கு மாயாகுளம் என பெயரிடப்பட்டது. மாயா என்பவர் புத்தரின் தாயார். புத்தர் வம்சத்தில் பிறந்த பசுபதி கோவிலை கட்டியுள்ளார்கள்.