Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“13 லட்சத்திற்கு பூக்கள் வாங்கி மோசடி செய்த வியாபாரி”… போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் புகார்…!!!!!!

சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டிருப்பதாவது, தங்களது சங்கம் 10 வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங்கத்தில் 2,600 கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தங்களது தோட்டத்தில் சம்பங்கி, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிரிட்டு சங்கத்திற்கு விற்பனைக்கு  கொண்டு வருது வழக்கமாகும்.

இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் சங்க உறுப்பினர்களான விவசாயிகளிடம் பூக்களை வாங்கி வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தார். இந்த சூழலில் கடந்த மே மாதம் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து ரூபாய் 13 லட்சத்து 900 ரூபாய் மதிப்பிலான  பூக்களை வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை பணம் கொடுக்கவில்லை.

இது குறித்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட வியாபாரியை  தொடர்பு கொண்டு பணத்தை கேட்டபோது காலதாமதப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார். பூக்களை வாங்கி பணம் பெறுவதாக நம்பிக்கை மோசடி செய்து விவசாயிகளை ஏமாற்றி வரும் வியாபாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில்  அவர்கள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |