தெலுங்கானாவைச் சேர்ந்த சிறுமி முறிக்கி புலாகிதா ஹஸ்வி(13). இவருக்கு புதிதாக ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையின் காரணமாக உயரமான மலையில் ஏறி சாதனை படைக்கலாம் என முடிவெடுத்த அவர், மலையேறுதல் தொடர்பான வீடியோக்கள், திரைப்படங்களை திரும்ப திரும்ப பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதற்கான டிரெக்கிங் பயிற்சியும் எடுத்துள்ளார்.
இவரது ஆர்வத்தை கண்டு பெற்றோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கொரானா காலத்தில் பள்ளி விடுமுறை என்பதால் ஹஸ்விக்கு பயிற்சி எடுக்க நிறைய அவகாசம் கிடைத்தது. இதனையடுத்து ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ மலையை தேர்ந்தெடுத்து அதில் ஏறுவதென முடிவு செய்துளளார். இதற்காக பல பயிற்சிகள் எடுத்த அவர் அதன் மீது ஏறி சாதனை படைத்துள்ளார். தான் இந்தியாவை சேர்ந்தவர் என்பதற்காக அவர் இந்திய தேசியக் கொடியையும் கையில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.