Categories
தேசிய செய்திகள்

13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புதிய இன்ஸ்டாகிராம் உருவாக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை செல்போனில் இந்த செயலிகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களும் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் 13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புதிய இன்ஸ்டாகிராம் செயலி உருவாக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள், விளம்பரங்கள் வருவதால் சிறுவர், சிறுமிகள் பார்ப்பதற்காக பிரத்தியேகமாக இன்ஸ்டாகிராம் செயலி உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |