13 -வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
13 -வயது சிறுமியை கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் சந்தியா உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர் . இந்த வழக்கில் 9-வது நபராக கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திரன் என்பவர் எண்ணூர் காவல் ஆய்வாளராக இருக்கும் தனது நண்பர் புகழேந்தியுடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் புகழேந்தியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் புகழேந்தியை சஸ்பண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.