13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் தமிழ்நாடு எல்லைப்பகுதியான தென்மலை அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொளிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆல்பின், புனலூரைச் சேர்ந்த மகேஷ், இவர்களுக்கு தப்பிக்க உதவி செய்த ஷிபிலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகளில் ஒருவர் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
நள்ளிரவு வேளையில் சிறுமியின் வீட்டு அருகே சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்றினார். மேலும் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசார் விரைந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.