Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

13 வயது மகளை சீரழித்த தந்தை….. ஆண் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி….. வேலூரில் பரபரப்பு….!!!!

தந்தையே மகளை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சிபுரம் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இவருடைய 13 வயது மகள் பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தினமும் தன்னுடைய தந்தைக்கு பாட்டி வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்வார். இந்நிலையில் திடீரென சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு திருமணமாகாத விவரத்தை தெரிந்து கொண்ட மருத்துவர்கள், உறவினர்கள் மற்றும் தந்தையிடம் கேட்டபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் உடனடியாக வேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்ததில், தன்னுடைய தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததை கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |