இசையமைப்பாளர்களான இளையராஜாவும் கங்கை அமரனும் 13 வருடங்களாக பேசாமல் இருந்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
இளையராஜா: தமிழ் சினிமா உலகில் 40 வருடங்களாக இசை அமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார் இளையராஜா. இவர் 1,500 திரைப்படங்களுக்கு இதுவரையில் இசையமைத்துள்ளார். மேலும் அதிகப் பாடல்களை பாடியும் உள்ளார்.
கங்கை அமரன்: இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவர் இயக்குனராகவும் இசையமைப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் இளையராஜாவும் கங்கை அமரனும் பேசிக்கொண்டு 13 வருடங்களாகிறது. இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தனர். தற்பொழுது இவர்கள் இருவரும் 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள். இவர்கள் பேசாமல் இருந்ததற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கின்றன. காரணம் என்னவென்றால் “சின்ன ராமசாமி பெரிய ராமசாமி” திரைப்படத்தை தயாரிக்கும் போது தான் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார்கள்.
அண்ணன் இளையராஜாவுடன் இணைந்து கங்கை அமரன் கூறியுள்ளதாவது, “பல வருடங்களுக்கு பிறகு அண்ணனை சந்தித்து உள்ளேன். அண்ணன் என்னையும் என் உடல்நிலை பற்றியும் விசாரித்தார். என்னுடைய சம்சாரம் இறந்தது குறித்தும் விசாரித்தார். அண்ணன் இளையராஜாவின் இசை பற்றி சில கருத்துக்களை அவரிடம் கூறினேன். நீண்ட வருடங்களுக்கு பிறகு அண்ணன் உடன் இணைந்த நான் இனி அண்ணன் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். அவர் முடிவு தான் என்னுடைய முடிவு மற்றும் நாங்கள் இருவரும் எதிர்பாராமல் இணைந்த இந்நிகழ்வு இறைவனின் ஆசீர்வாதம்” என மனமுருகி கூறியுள்ளார்.