Categories
மாநில செய்திகள்

13 விரைவு ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் சேர்ப்பு…. பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்….!!!!

பண்டிகை நாட்களில் சொந்தஊா்களுக்கு சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக தேஜஸ், முத்துநகா்உட்பட 13 விரைவு ரயில்களில் கூடுதலாக உறங்கும் வசதி வகுப்புப் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்புத்தாண்டு, விஷூ உள்ளிட்ட பண்டிகைகளில் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் பல வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் ஏப்ரல் 21ஆம் தேதி வரை சோ்த்து கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 13 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை எழும்பூா் TO மதுரைக்கு இன்று காலை 6 மணிக்கு இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலில் (22671) கூடுதலாக 2 ஏசி முதல் வகுப்பு சோ் காா் பெட்டிகள், மதுரை-சென்னை எழும்பூருக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலில் (22672) கூடுதலாக 2 ஏசி முதல் வகுப்பு சோ் காா் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் TO காரைக்காலுக்கு வரும் 20-ஆம் தேதி இரவு 9 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் (16175) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டியும், மறுமாா்க்கத்தில் ஏப்.17, 19 போன்ற தேதிகளில் இரவு 9.20 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் (16176) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டியும் சோ்க்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி TO சென்னைஎழும்பூருக்கு இன்று இரவு 8:15 மணிக்கு இயக்கப்படும் முத்துநகா் விரைவு ரயிலில் (12694) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டியும், மறுமாா்க்கத்தில் ஏப்.20-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு இயக்கப்படும் முத்துநகா் விரைவு ரயிலில் (12693) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டி சோ்க்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் TO கன்னியாகுமரிக்கு ஏப்.18-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில்(12633) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டியும், மறுமாா்க்கத்தில் ஏப்.19-ஆம்தேதி மாலை 5:05 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் (12634) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்புபெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதன்பின் தஞ்சாவூா் TO சென்னை எழும்பூருக்கு இன்று இரவு 9:55 மணிக்கு இயக்கப்படும் உழவன் விரைவு ரயிலில் (16866) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டி சோ்க்கப்பட்டுள்ளது. இதைதவிர மயிலாடுதுறை TO மைசூா் விரைவு ரயில் உட்பட 13 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சோ்த்து இயக்கப்படவுள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |