Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”13.5 டன் லாரி” 110மீ தூரம் இழுத்து…. உலக சாதனை….. குமரி வாலிபருக்கு குவியும் பாராட்டு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளைப் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல்வலு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இரும்பு மனிதன் போட்டியில் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் ஒரு கனரக வாகனத்தை கயிறு மூலம் 40 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு உலக சாதனையை கண்ணன் படைத்துள்ளார். அதாவது 13.5 டன் எடை கொண்ட லாரியை 110 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றார். இதனால் கண்ணன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த சாதனையை இதுவரை உலகில் யாருமே நிகழ்த்தியதில்லை என சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் கூறியுள்ளனர். மேலும் கண்ணனுக்கு உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.

Categories

Tech |