தசைசிதைவு நோயினால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த குமரி இளைஞர் ஒருவருக்கு செய்தி எதிரொலியால் அமெரிக்க வாழ் தமிழர் உதவிக்கரம் நீட்டி உள்ளார்.
குமரி மாவட்டம் நாவல் காடு பகுதியைச் சேர்ந்த காந்திலால் தசைச்சிதைவு நோய் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். இருப்பினும் வீட்டில் இருந்தபடியே கிராம மக்களுக்கு தன்னால் இயன்ற சமூக சேவையாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது மகன் வெளி உலகத்தை காணும் வகையில் மோட்டார் நாற்காலி வழங்குமாறு அரசுக்கு காந்திலாலின் தாயார் லீலா கோரிக்கை வைத்திருந்தார்.
இது தொடர்பான செய்தி ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ரிச்சர்ட் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் நாற்காலியை அவருக்கு இலவசமாக வாங்கி கொடுத்துள்ளார். இதனால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வெளி உலகத்தை பார்ப்பதாக கூறுகிறார் காந்திலால். மோட்டார் நாற்காலியில் அமர்ந்தபடி தற்போது வீதி வீதியாகச் சென்று சமூக சேவையை தொடர்ந்து வருகிறார் காந்திலால்.