ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் பிற்பகல் 61 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினரின் இரண்டு அணிகள் சம்பவ இடத்திற்கு வந்தன. விசாகப்பட்டினம் மற்றும் குண்டூரிலிருந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் நீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் கோதாவரி ஆற்றில் நீந்தி கரை திரும்பினர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. உள்ளூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
கோதாவரி ஆற்றில் சனிக்கிழமை வரை கிட்டத்தட்ட 5 லட்சம் கியூசெக் வெள்ள நீர் வந்து கொண்டிருந்தது. எனவே சுற்றுலா சேவைகள் நிறுத்தப்பட்டன. வெள்ள நீர் குறைந்து வருவதால், சுற்றுலாப் படகுகளுக்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்த நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.