நாகலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 13 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தால் இணையச்சேவை முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். ஆனால், பாதுகாப்பு படை அதிகாரிகள், தீவிரவாதிகள் என்று கருதி பொதுமக்கள் மீது தவறுதலாக துப்பாக்கிசூடு தாக்குதல், நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் பொது மக்கள் பலியான சம்பவம், அங்கு பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாகலாந்தில் இணையச்சேவை முடக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.