Categories
தேசிய செய்திகள்

“ரூ‌. 13 லட்சம் வாடகை பாக்கி, ரூ.‌ 2.50 லட்சம் மின்சார பாக்கி”…. 3 வருடங்களாக ஓனருக்கு டிமிக்கி கொடுக்கும் எம்பி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் மல்லிகார்ஜுன் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 அடுக்குமாடி வீடுகளை கட்டி அதில் வசித்துவருகிறார். இவரின் ஒரு வீட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி கோரண்டலா மாதவ் வாடகைக்கு வாங்கியுள்ளார். ஆனால் வாடகைக்கு வாங்கிய எம்.பி கடந்த 3 வருடங்களாக மின்சார கட்டணம் மற்றும் வாடகை கட்டணம் எதுவும் செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன் ரெட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால் மல்லிகார்ஜுன் ரெட்டி 10 பேருடன் சென்று வாடகை பாக்கி தருமாறு கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த எம்பி மாதவ் மல்லிகார்ஜுன் ரெட்டி 10 பேருடன் வந்து தன்னை தாக்க முயற்சி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல் துறையினர் மல்லிகார்ஜுன் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே எம்பி மாதவ் என்ற பெண்ணுடன் நிர்வாண வீடியோ கால் சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மல்லிகார்ஜுன் ரெட்டிக்கு எம்பி வாடகை பணமாக 13 லட்ச ரூபாயும், மின்சார கட்டணமாக 2,50,413 ரூபாயும் கொடுக்க வேண்டும்.

Categories

Tech |