வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேவு பார்க்கப்பட்டு வந்ததாக வந்த தகவலை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ்அப் தளங்கள் இஸ்ரேலி நாட்டின் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மக்களை உளவு பார்த்ததாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 13 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வாட்ஸ்அப் வேவு பார்ப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் அளிக்கவும் நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.