Categories
தேசிய செய்திகள்

அதிகாலை நடந்த பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய கார்… தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் உடல் நசுங்கி பலி!

கர்நாடகாவில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பும் போது இரண்டு கார் நேருக்கு நேர் மோதியதில் கிருஷ்ணகிரியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் சீக்கனப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் (dharmasthala) உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் காரில் இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவிலுள்ள ஆவரைக்கல் அருகே (avaragere) பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்  கார் அதிகாலை 2.30 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது, சாலையின் மறுபக்கம் எதிர்திசையில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

Image result for 13 people karnataka accident

அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே சுமார் அரை அடிக்கும் குறைவான உயரம் கொண்ட மீடியனை தாண்டி வந்து 13 பேர் வந்து  கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் இரண்டு கார்களுமே அப்பளம்போல நொறுங்கியது. இந்த கொடூர விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காரில் பயணம் செய்தவர்களில் 1 வயது குழந்தை உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

Image result for 13 people karnataka accident

மேலும் அந்த காரில் இருந்த மூவர் படுகாயமடைந்தனர். அதில் ஒரு குழந்தை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.அதேபோல விபத்து ஏற்படுத்திய எதிரே வந்த காரில் பயணித்த பெங்களூரைச் சேர்ந்த மூவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். இந்த சம்பவம் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்துக்கு, பெங்களூரை சேர்ந்தவர்கள் வந்த காரை இயக்கி வந்த ஓட்டுநர் தூங்கியதே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |