Categories
மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, போக்கோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனா்…!!

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம்  பூம்புகார் தர்மகுலத்தை சேர்ந்தவர் தேவா, 22 வயதான இவர் செம்மனார்  கோவில் பகுதியிலுள்ள தனது தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம், இந்நிலையில் தாத்தாவின் வீட்டருகே தனியாக இருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் சிறுமி பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காமக்கொடூரன் தேவாவை குழந்தைகளின் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளனர்.

Categories

Tech |