இயக்குனர் திருமுருகன் 13 வருடம் கழித்து மீண்டும் திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டிஒலி’ என்ற சீரியலை இயக்கி , நடித்து பிரபலமடைந்தவர் இயக்குனர் திருமுருகன் . இதையடுத்து இவர் இயக்கத்தில் பரத் மற்றும் கோபிகா நடிப்பில் வெளியான ‘எம் மகன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் பரத்தை வைத்து ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தை இயக்கினார் .
ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை . இதனால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி நாதஸ்வரம் ,கல்யாண வீடு உள்ளிட்ட சீரியல்களை இயக்கினார் . இந்நிலையில் 13 ஆண்டு இடைவெளிக்குப் பின் இயக்குனர் திருமுருகன் மீண்டும் திரைப்படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .