13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராஜஸ்தானில் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள ஷேர்கா பகுதியில் 13 வயது மாணவி ஒருவர் அங்குள்ள மொகம்கர் அரசு பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சமீபத்தில் கடும் வயிற்றுவலி மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் கூறினார். அது யாதெனியல் ,அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் சுஜாராம் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த ஆசிரியர் மார்ச் மாதத்தில் பள்ளிக்கு வந்த சிறுமியை வகுப்பறையிலேயே 4 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .
இவருடன் அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியரான சாஹிராம் என்பவரும் சுஜாராமுக்கு உடந்தையாக இருந்துள்ளார் . மேலும் இருவரும் நாங்கள் சொல்வதற்கு மறுப்பு தெரிவித்தல் பரீட்சையில் ஃபெயில் செய்து விடுவோம் என்று அந்த சிறுமி மிரட்டியுள்ளனர். இது குறித்து அறிந்தவுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 ஆசிரியர்கள் மீதும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த விஷயம் தெரிந்த ஆசிரியர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ய வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநில முதலமைச்சரின் சொந்த ஊரிலேயே நடந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .