தஞ்சாவூரை சுற்றியுள்ள 13 கிராமத்து மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளனர் .
மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆனது தஞ்சாவூரை சுற்றியுள்ள கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டமானது உறுதியாக செயல்படுத்தப்பட இருக்கும் நிலையில் அதற்கான உபகரணங்களான குழாய்கள், இயந்திரங்கள் போன்றவை கிராமங்களுக்கு தினந்தோறும் வந்துகொண்டே இருக்கிறது. இதனை கண்டு ஆத்திரமடைந்த மன்னார்குடியை அடுத்த பதிமூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குளத்தில் இறங்கியும் மண்சட்டி ,மம்புட்டி போன்றவற்றை கையில் ஏந்தியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.