Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. என்னவெல்லாம் நடக்கிறது.. விபச்சார விடுதிக்கு போன 13 வயது சிறுவன்.. நீதிமன்றத்தின் அறிவுரை..!!

ஸ்விட்சர்லாந்தில் 13 வயதுடைய சிறுவன் விபச்சார விடுதிக்கு சென்று வந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் 13 வயதுடைய ஒரு சிறுவன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரு விபச்சார விடுதிக்கு சென்று 23 வயது பாலியல் தொழிலாளியுடன் தவறான உறவில் இருந்திருக்கிறார். அப்போது அச்சிறுவன் தனக்கு 18 வயது என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் விபச்சார விடுதியிலிருந்து சிறுவன் வெளியே வந்ததை அங்கு சோதனை பணியில் இருந்த காவல்துறையினர் பார்த்துவிட்டனர்.

எனவே சிறுவனிடம் விசாரித்தபோது அவருக்கு பதிமூன்று வயது தான் என்பது தெரியவந்தது. எனவே காவல்துறையினர் அந்த பாலியல் தொழில் ஈடுபட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது, இச்சம்பவம் தொடர்பில் வெளியான தீர்ப்பில் அந்த பெண்ணிற்கு 90 பிராங்குகள், 90 தினங்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் அந்த பெண்ணிடம், நீதிபதி, உங்களிடம் வரும் நபர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை உடனே வெளியேற்றுமாறு அறிவுரை கூறினார். அதற்கு அந்த பெண், “சிறுவன், எனக்கு 18 வயது என்று தான் கூறினார். மேலும் பார்ப்பதற்கு இளைஞர் போன்று தான் இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக, இது போன்ற இடங்களில் அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்வார்கள். எனினும் இந்த விடுதியில் அடையாள அட்டை காண்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |