Categories
தேசிய செய்திகள்

திருமண ஏற்பாடு செய்த பெற்றோர்… பயமில்லாமல் 13 வயது சிறுமி செய்த செயல்… பின் நடந்தது இதுதான்..!!

தனக்கே தெரியாமல் நடக்க இருந்த திருமணத்தை 13 வயது சிறுமி தைரியமாக தடுத்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது.

கொரோனா காலத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதில் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் திருமணங்களும் அடங்கும். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் புலந்த்ஷாஹர்  மாவட்டத்தை சேர்ந்த பிரீத்தி எனும் 13 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமிக்கு தெரியாமல் இருந்துள்ளது.  மூன்று குழந்தைகள் உள்ள அந்த குடும்பத்தில் தந்தை மட்டுமே பணிபுரிகிறார்.

எனவே கொரோனா காலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து சிறுமிக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் மணமகனின் வீட்டிலிருந்து திருமண தேதியை முடிவு செய்ய வந்தபோது பிரீத்திக்கு திருமணம் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறிதும்  காலம் தாழ்த்தாமல் தனது அண்ணனின் தொலைபேசியில் இருந்து தனது ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளார் பிரீத்தி.

இதனை அடுத்து வகுப்பாசிரியர் மது ஷர்மா அவரது பெற்றோரிடம் அவர்களது தவறை எடுத்துக்கூறி கண்டித்தார். இதேபோன்று ஸ்ருதியின் வீட்டின் அருகே வேறு ஒரு சிறுமிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து உள்ளது ப்ரீத்தியின் செயலை அறிந்து கொண்ட அச்சிறுமி ரிங்கிங் எனும் சிறுமி தனது ஆசிரியருக்கும் தகவல் தெரியப்படுத்த அவர் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் இன்று உதவியோடு ரிங்கிட் நடக்க இருந்த திருமணத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்

Categories

Tech |