Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

90’ஸ் கிட்ஸ்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…. மீண்டும் வருகிறார் சக்திமான்!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மீண்டும் ‘சக்திமான்’ தொடர் ஒளிப்பரப்பவுள்ளதாக முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

90’ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவருமே சற்றும் யோசிக்காமல் படாரென்று சொல்லும் பெயர் ‘சக்திமான்’ தான். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன்  என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சரி அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ‘சக்திமான்’ என்பதை அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும்.

Will #Shaktimaan have a sequel? - Times of India

சாதாரண மனிதராக இருக்கும் சக்திமான், அந்த ஊரில் தவறு நடக்கும்போது சக்திமானாக மாறி மக்களை தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றுவார். இவரைப்பார்த்து தான் நாம் வளர்ந்திருப்போம். ஒரு நாளாவது சக்திமான் போல் மாற வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். அந்த அளவிற்கு இந்தத் தொடர் ரசிகர்கள் மனதில் இன்று வரையிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது. ஒருநாள் இந்த தொடரை மிஸ் செய்து விட்டால் ரொம்ப கஷ்டப்படுவோம்.
Shaktimaan - Episode 21 - YouTube

சக்திமான் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. தற்போது இந்தத் தொடரை மிண்டும் ஒளிப்பரப்ப வேண்டும் என்று சக்திமான் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று மீண்டும் அத்தொலைக்காட்சி சக்திமான் தொடரை ஒளிப்பரப்ப முடிவு செய்திருக்கிறது.

Vashnavi Mac- Throwback to shaktimaan #The 90's??

இதுகுறித்து சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், “130 கோடி இந்தியர்களும் மீண்டும் ஒன்றிணைந்து ‘சக்திமான்’ தொடரை பார்க்க தயாராகுங்கள். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் காத்திருங்கள் ” என்று பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு சக்தி மான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் சக்தி மான் ரசிகர்களாக இருந்தால் பார்த்து ரசிக்க தயாராக இருங்கள்.

Categories

Tech |