பீகாரில் பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில்மும்பை, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வந்த கன மழையால் வெள்ள பெருக்கில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகினர். இம்மாநிலங்களை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து 400க்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 130 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்னும் 2 நாட்களுக்கு மிதமான மழை பிகாரில் நீடிக்கும் என அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.