கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் செங்கண்மா வரலாற்று நடுவத்தைச் சேர்ந்த பிரேம்ஆனந்த் என்பவர் நடுக்கற்களை கண்டுபிடித்துள்ளார். அதில் 2 நடுகற்கள் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்ததும், மற்றொரு நடுக்கல் 9- ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்த பகுதியை ஆட்சி செய்த நுளம்பர்களின் நடுக்கல் ஆகும். இந்த நடுக்கல்லை தொல்லியல் துறையைச் சேர்ந்த பூங்குன்றன் என்பவர் ஆய்வு செய்துள்ளார்.
இதுகுறித்து பூங்குன்றன் கூறியதாவது, முதல் நடுக்கலில் பெருமந்தைகளை மீட்கும் போது சாத்தனாதி சேத்தன் என்பவர் இறந்துள்ளார் என பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நடுக்கடலில் இருக்கும் சொற்கள் தேய்ந்து படிக்க இயலாதவாறு இருக்கிறது. 3- ஆம் நடுக்கல் நுளம்பர் மன்னன் அன்னிகன் வெட்டியது ஆகும். இது கன்னட மொழி மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டின் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லில் போர் வீரரான அனிம்த்யா மரணத்தை பதிவு செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.