Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1,30,000 ரூபாயை” பறிகொடுத்த பெண்… செங்கல்பட்டில் நடந்த நூதன திருட்டு….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்ணிடம் நூதன முறையில் 1,30,000 ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டில் உள்ள வன்னியர் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பின்னர் அவர் பணத்துடன் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பத்து ரூபாய் கீழே கிடக்கிறது என்று தனலட்சுமியிடம் கூறியுள்ளனர்.

கீழே கிடந்த ரூபாயை தனலட்சுமி எடுக்க முயன்றபோது அந்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தனலட்சுமி  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |