Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 131 பேரும், கர்நாடகாவில் 116 பேரும் இன்று புதிதாக கொரோனா வைரஸால் பாதிப்பு!

ராஜஸ்தானில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,146 ஆக அதிகரித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 41 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் ராஜஸ்தானில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3422 பேர் குணமாகி உள்ளது நிலையில் 3,041 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல கர்நாடகாவில் 116 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1568ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கர்நாடகாவில் கொரோனோவால் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 570 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 1,12,359ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,435ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு1,390 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |