Categories
மாநில செய்திகள்

1,323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு: முதல்வர் அறிவிப்பு..!

ஏப்ரல் 30ம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒப்பந்த முறையில் தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 1,323 செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு பொற்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே 1,058 ஆய்வக நுட்பனார்கள்( லேப் டெக்னீஷியன்), 530 மருத்துவர்கள், மட்டும் 1,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். மேலும் கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 30ம் தேதியோடு ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதத்திற்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,323 செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பணி நியமன ஆணை கிடைத்தவுடன் உடனடியாக பணியில் சேருமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |