Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

133 அடி உயர திருவள்ளுவர் சிலை…. சுற்றுலா பயணிகளுக்கு 5 மாதங்கள் தடை…. வெளியான அறிவிப்பு….!!!

திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தளமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு காலையில் உதிக்கும் சூரிய உதயத்தை பார்ப்பதற்காகவே கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிகின்றனர். இங்கு கடலின் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு மூலமாக சுற்றுலா பயணிகள் செல்வார்கள்.

இந்நிலையில் 133 அடி உயரத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை உப்பு காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு சிலிகான் கலவை பூசப்பட்ட நிலையில் தற்போது பூசுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூபாய் 1 கோடி வரை செலவாகும். இந்த பணிகள் முடிவடைய சுமார் 5 மாதங்கள் ஆகும். இதன் காரணமாக 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |