கடந்த சில நாட்களில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 97 பயணிகளிடம் இருந்து சோதனை மாதிரிகளை கோவையில் சுகாதாரத்துறை சேகரித்து வருகிறது.
இங்கிலாந்தில் புதிய கொரோனா பரவுவதாக புதிய தகவல் வந்த நிலையில் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கினார். சேகரிக்கப்பட்ட மக்களின் முடிவுகளில் இன்னும் வரவில்லை என்றும். மேலும் திரும்பி வருபவர்கள் தங்களது வீட்டில் தங்களைத் தானே தனிமைப்படுத்தி வைத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் டிசம்பர் 23 முதல் 31 வரை இங்கிலாந்தில் இருந்து வரும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை நகரத்தில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்று இங்கிலாந்தில் இருந்து வந்த பயண விவரங்களை பற்றி விசாரிக்க தொடங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஹோட்டல் அல்லது பிற தங்குமிடங்களை கண்காணிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டது.
அடுத்தடுத்த சோதனைகளில் நவம்பர் 1 முதல் சென்னை வழியாக கோவைக்கு வந்த 133 பயணிகளில் 97 பேரை சுகாதாரத்துறையில் அடையாளம் கண்டுள்ளதாகவும், மீதமுள்ள 36 பயணிகளை இன்னும் அடையாளம் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அடையாளம் காணப்பட்ட நபர்களிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டதாகவும், அதில் யாருக்காவது பாசிட்டிவ் என முடிவு வந்தால் அந்த நபர் கொரோனா பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்படுவார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.