தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் 3ம் நாளாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.17% ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது.
இறப்பு விகிதம் 0.901% ஆக உள்ளது. இதுவரை கொரோனவால் 25,167 ஆண்கள் ( 61.83% )பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 15,514 பேர் (38.11%) பாதிக்கப்பட்டுள்ளனர். திருநங்கைகள் 17 பேர் (0.041%) பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மொத்த பாதிப்புகளின் விகிதம் 71.10% ஆக அதிகரித்துள்ளது.