கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இரும்பிலி பகுதில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மது வாங்கி அருந்தி வருகின்றனர். இந்நிலையில் வாலிபர் ஒருவர் இரண்டு குவாட்டர் பாட்டில்களை குடிப்பதற்காக வாங்கியுள்ளார். அப்போது அதில் உள்ள ஒரு பாட்டிலுக்குள் பெரிய அளவிலான தூசி ஒன்று இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அந்த பாட்டிலை மதுபான கடையில் திரும்ப கொடுத்த போது ஊழியர்கள் அதை வாங்க மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த அவர் அந்த குவாட்டர் பாட்டிலில் மிதக்கும் தூசியோடு வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் 135 ரூபாய் கொடுத்து ஒரு குவாட்டர் வாங்கினால் அதில் என்னென்னவோ தூசுக்கள் கிடக்கிறது. இதை குடித்துக்கொண்டு நாங்கள் சாக வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதே போல இனி மேலும் பாட்டில்கள் வந்தால் பார் தீப்பற்றி எரியும் என்று ஆவேசமாக பேசி வீடியோ பதிவு செய்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் அது தற்போது வேகமாக பரவி வருகிறது.