Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுவரை 135 குழந்தைகள் மீட்பு… சென்னையில் அதிரடி நடவடிக்கை…!

சென்னையில் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கும் பணியில் குழந்தை நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் அருகில் குழந்தைகளும் தாய்மார்களும் பிச்சை எடுப்பதை நாம் கண்டுள்ளோம். அவர்களில் சிலர் தங்களது குடும்ப வறுமையினால் பிச்சை எடுக்கின்றனர். ஆனால் சில கும்பல்கள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து வருகிறது.

இந்நிலையில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 135 குழந்தைகளை மீட்டுள்ளனர். அப்படி மீட்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்களிடமும், பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளை குழந்தைகள் நலக்குழு மற்றும் அரசு குழந்தைகள் விடுதிகளிலும் ஒப்படைக்கப் படிக்கின்றனர்.

Categories

Tech |