தூத்துக்குடியில் இருந்து கடத்தி சென்ற 135 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கடத்தல்காரர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர காவல்படை, உளவுத்துறை, கடலோர பாதுகாப்பு காவல் துறையினர் போன்ற அனைவரும் விரலி மஞ்சள், வெங்காய விதைகள் மற்றும் பீடி இலை போன்ற பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விரலி மஞ்சள் மற்றும் பீடி இலை போன்ற பொருட்களை கடந்த மாதம் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்களில் தூத்துக்குடியில் இருந்து கடத்தி சென்ற 17 பேரை இலங்கை கடற்படையினர் எச்சரித்து மீண்டும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஏனெனில் கொரோனா தொற்று அபாயம் அதிகமாக இருப்பதால் இலங்கையில் கடற்படை வீரர்கள் கடத்தல்காரர்களை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கீழவைப்பாரில் இருந்து ஒரு நாட்டுப் படகில் 7 பேர் கஞ்சாவை கடத்தி சென்றதால் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் படகில் கடத்தி செல்லப்பட்ட 80 பண்டல்களில் இருந்த 235 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இவ்வாறு இலங்கை கடற்படையினர் கடத்தல்காரர்களை கைது செய்து நாட்டிற்கு அழைத்து செல்லாமல் மீண்டும் தூத்துக்குடிக்கு செல்லுமாறு அவர்களை அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது