உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய வீரர்கள் 13800 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதை எதிர்த்தே ரஷ்ய படைகள் அந்நாடு மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த மாதம் 20-ம் தேதி ரஷ்ய தொடங்கிய இந்த போரானது இன்றுடன் 23- வது நாளாக உக்ரைன் மீது தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்ய தன் வசம் கொண்டு வந்த போதிலும் தலைநகரான கீவ்வை தனது கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
மேலும் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் திணறுகின்றது. இந்த தாக்குதலால் அப்பாவி பொதுமக்கள் அதிகம் பலியாகியும், பாதிக்கப்பட்டும் வருகின்றனர். மேலும் வெளிநாடுகளுக்கு அகதிகளாக உக்கிரன் நாட்டு மக்கள் வெளியேறும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு இணையாக உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலினால் 13,800 ரஷ்ய வீரர்கள் பலியாகி உள்ளதாக உக்ரைன் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.