Categories
தேசிய செய்திகள்

14ஆவது குடியரசு துணைத் தலைவரானார் ஜெகதீப் தன்கர்… பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய பிரதமர் மோடி..!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.. இதில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா தோல்வியடைந்துள்ளார். இதனால் குடியரசு துணைத் தலைவராக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 528 வாக்குகளை பெற்று ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 725 வாக்குகளில் ஜெகதீப் தங்கர் 528 வாக்குகளும், மார்க்ரெட் ஆல்வா அவர்கள் 182 வாக்குகளும் பெற்றனர் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வாகி இருக்கிறார். குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்கும் விழா வரும் வாரத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் அடிப்படையில் ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.. இவர் தனது வாழ்க்கையை விவசாய குடும்பத்தில் தொடங்கியவர்.. படிப்படியாக ஜெகதீப் வழக்கறிஞராக தேர்வு பெற்று, பின்னர் உச்சநீதிமன்றத்தில் சிறிது காலம் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.. அதன் பிறகு முழு நேர அரசியலில் இறங்கி வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.. வி.பி சிங் மத்திய பிரதமராக இருந்தபோது ஜெகதீப் தன்கர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியால் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டவர். அங்கே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மோதலில் இவர் ஈடுபட்டிருந்ததும் பிரபலமானது.. அத்தகைய சூழ்நிலைதான் பாரதிய ஜனதா கட்சி இவரை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவித்தது.. ஜெகதீப் தன்கர் மக்களவை, மாநிலங்களவையில் பெரும்பான்மை இருக்கும் நிலையில், 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Categories

Tech |