சென்னையில் 14 வருடங்களுக்குப் பிறகு சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஆர்ஜித சேவை, சஹஸ்ர தீபலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம், நிஜபாத தரிசனம், அஸ்டதளபாத தீபாராதனை, அர்ச்சனை, தோமாலை, சுப்ரபாதம் உள்ளிட்ட சேவைகள் இருக்கிறது. இந்நிலையில் வருகிற 16-ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னையில் கட்டப்படும் பத்மாவதி தாயார் கோவில் பணிகளையும் ஆய்வு செய்தனர். இந்தக் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணத்தில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 14 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது என தேவஸ்தான கூடுதல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியுள்ளார்.