பெண் குழந்தை மீது இருந்த அன்பினால் 14 ஆண் குழந்தைகளைப் பெற்ற பிறகு 15-ஆவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது
அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகன் பகுதியை சேர்ந்த தம்பதியினர் கட்டேரி-ஜே ஸ்வாண்ட். இத்தம்பதியினருக்கு பெண் குழந்தையின் மீது அதீத அன்பு இருந்துள்ளது. ஆனால் இவர்களுக்கு பிறந்தது ஆண் குழந்தை. இருந்தாலும் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்து உள்ளனர். 14 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இத்தம்பதியினருக்கு 15 ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
தனது 45வது வயதில் அந்தப் பெண் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு மேகி ஜெய்னே என தம்பதியினர் பெயர் சூட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் “பல காரணங்களுக்காக மறக்க முடியாத வருடமாக இது அமைந்துள்ளது. ஆனால் நினைத்துப் பார்க்க முடியாத பரிசாக எங்கள் மேகி கிடைத்துவிட்டாள்” என கூறியுள்ளனர்.