தம்பதிகள் இருவருக்கு 27 வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிக்ஸிகனைச் சேர்ந்த தம்பதி கட்டேரி மற்றும் ஜேஸ்க்வான்ட். இத்தம்பதியினருக்கு பெண் குழந்தைகளை மிகவும் பிடிக்குமாம். ஆனால் இவர்களுக்கு தொடர்ந்து ஆண் குழந்தைகள் தான் பிறந்து வந்துள்ளது. எனினும் பெண் குழந்தையை பெற்றெடுப்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 27 வருடங்களுக்கு பிறகு அவர்களின் ஆசை நிறைவேறியுள்ளது. அதாவது 14 ஆண் பிள்ளைகளுக்கு பிறகு தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தப் பெண்மணி 40 வயதான நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தையை பெற்றுள்ளார். இக்குழந்தைக்கு மேகி ஜெயினே என்று பெயரிட்டுள்ளார்கள். இதுகுறித்து இத்தம்பதியினர் கூறுகையில், 2020 வருடத்தில் எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பொக்கிஷம் இதுதான் என்று உற்சாகத்துடன் கூறியுள்ளனர். மேலும் ஒவ்வொரு வருடமும் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் போதெல்லாம் செய்திகளில் இடம் பெற்று விடுவார்கள். தற்போது இவர்களுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.