பெண் குழந்தை வேண்டும் என்று காத்திருந்து 15 குழந்தைகள் பெற்ற தம்பதியினரின் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க நாட்டில் மிக்சிகன் மாகாணத்தில் வசிக்கும் தம்பதிகள் கத்தேரி – ஜே ஸ்ச்வான்ட். இவர்கள் கடந்த 28 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் அதற்கடுத்து பிறந்த குழந்தைகள் எல்லாமே ஆண் குழந்தைகளாகவே பிறந்துள்ளன. ஆனால் இவர்களுக்கு பெண் குழந்தை மேல் ஆசை என்பதால் நிச்சயமாக ஒரு பெண் குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.
இதனால் அவர்கள் பெண் குழந்தை பெற்றுக் கொள்ள வரிசையாக குழந்தை பெற தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனைத்தும் ஆண் குழந்தையாகவே பிறந்துள்ளது. இந்நிலையில் இத்தம்பதியரின் வளர்ந்த ஆண் குழந்தைகள் அனைவரும் இணைந்து “14 Outdoorsmen” என்ற ஒரு இணையத்தை புதிதாக ஆரம்பித்துள்ளனர்.
இத்தம்பதிகளுக்கு 45 வயது ஆகும் நிலையில் தற்போது 15 வதாக ஒரு பெண் தேவதை பிறந்துள்ளார். இதுகுறித்து கத்தேரி கூறுகையில், “என்னுடைய மூத்த மகனுக்கு 28 வயது. எங்கள் தாயை தவிர வீட்டில் அனைவருமே ஆண்கள் தான். எங்கள் செல்லப் பிராணியான நாய் கூட ஆண் தான். தற்போது இந்த குழந்தையின் வருகையால் பிங்க் நிறத்திற்கு வேலை வந்துவிட்டது. இந்த குட்டி தேவதைக்கு நாங்கள் மேகி ஜானி என்று பெயர் வைத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.