Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

14 நாட்களில் இவ்வளவு காணிக்கையா ? மொத்தமாக அள்ளிய திருத்தணி முருகன் கோயில் …!!

திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள்  14 நாட்களில் 44 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்துவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திரு தளம் ஆகும். இந்த  திருக்கோவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பணம், தங்கம் போன்றவைகளை உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோவில், மலை கோவிலில், தேவர் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்த பணியில் ஊழியர்கள், தன்னார்வாளருகளும்  ஈடுபட்டனர்.  44 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் 295 கிராம் தங்கமும் 2 ஆயிரத்து 500 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் 14 நாட்களில் செலுத்தியுள்ளதாக திருத்தணி கோவில் நிர்வாகம் உள்ளது தெரிவித்தது .

Categories

Tech |