ஆந்திர மாநிலத்தில் மே 5-ம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாநிலம் முழுவதும் வருகின்ற மே மாதம் 5-ம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமலில் இருக்கும். அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்து அலுவலகங்களும் மூடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.