தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க ராயபுரம், திருவொற்றியூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை 14 நாட்களுக்கு முன்னர் வீட்டுக்கு அனுப்பும் பட்சத்தில் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.