Categories
தேசிய செய்திகள்

14 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட மெகபூபா முப்தி …!!

பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெகபூபா முப்தி 14 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் திருமதி. மெகபூபா முப்தி தேசிய மாநாட்டு கட்சி தலைவர் திரு. பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதலமைச்சருமான திரு. உமர் அப்துல்லா நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் திரு. பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது மகன் திரு. உமர் அப்துல்லாவும் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் திரு. மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார். அவரை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு வந்தது. இந்நிலையில் 14 மாதமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த திருமதி. மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |