கொரோனா பாதிப்பால் கடந்த சில தினங்களில் நாடு முழுவதும் 220 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 164 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது . சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று சுமார் 14 ஆயிரத்து 764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிப்பு சுமார் 17 ஆயிரத்ததை நெருங்கி உள்ளது என்பது மேலும் திடுக்கிட வைக்கும் ஒரு தகவல் ஆகும். அப்படி நிலையில் நேற்றைய பாதிப்பு கடந்த 71 நாட்களில் இல்லாத அளவிற்கு 27 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் அதிகபட்சமாக மேற்குவங்காளத்தில் பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 1008 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் துரிதப் படுத்தப் பட்டுள்ளது. இதுவரை 144 கோடியே 54 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. இதில் நேற்று மட்டும் 66,65,290 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.